ஏன் ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கு பிராண்டிங் (Branding) மிகவும் முக்கியம் ?

ஏன் ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கு பிராண்டிங் (Branding) மிகவும் முக்கியம் ?

நம் நிறுவனத்திற்கு அடையாளம் தருவதன் மூலம் நம் ஊழியர்களுக்கு (employees) நம் வாடிக்கையாளர்களுக்கும் (clients) நம் நிறுவனத்தின் மேல் உள்ள மதிப்பு கூடும் .

இக்காலக்கட்டத்தில் வணிக சந்தையில் (Business market) ஒரே வகை பொருட்களை பல வணிகர்கள் விற்கின்றனர். வாடிக்கையாளர்கள் மிக சிறந்த சமுக அந்தஸ்து (Social status) மற்றும் தனக்கென தனி அடையாளம் கொண்ட நிறுவனத்திடம் மட்டுமே வணிகம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நிறுவனத்தின் அடையாளம் எத்தகைய மாயாஜாலங்களை செய்யவல்லது?

          வாடிக்கையாளர்கள் தனக்கென தனி அடையாளம் கொண்ட நிறுவனத்திடமிருந்து விளைபொருட்களையோ (Products) அல்லது சேவைகளையோ (Service) பெறுவதையே தனக்கு பெருமை என கருதுகின்றனர். ஆகையால், பல நிறுவனங்கள் பல பொருட்களை விற்றாலும் தனக்கென தனி அடையாளம் கொண்ட நிறுவனத்தின் பொருட்களே அதிக அளவில் விற்கப்பட்டு வருகின்றது.

 மேலும் ஒரு தொழிலுக்கு  மிகவும் அவசியமானது :-

  •  புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதும்
  • தற்போதைய வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்வதும் தான்

இதனைப் பிராண்டிங் (branding) சிறப்பாக செய்து முடிக்கிறது.

பிராண்டிங் பற்றிய ஐந்து உண்மைகள் :-

1. நம்பிக்கையை உருவாக்குகிறது.

          வாடிக்கையாளர்களின் நம்பிக்கை (Client trust) தான் தொழில்களின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. பிராண்டிங் (branding) , ஒரு வாடிக்கையாளரை இந்த நிறுவனத்திடம் இருந்து தான் பொருட்களை வாங்க வேண்டும் என இமைப்பொழுதில் தீர்மானம் செய்ய உதவுகிறது. உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த பிராண்ட்ங் (branding) செய்வதன் மூலம்  உங்கள் சேவையோ (service) அல்லது பொருள்களையோ(products) எளிதில் விற்க மிக சிறந்த வழியாகும்.

2. மற்றவர்களிடம் இருந்து மேலோங்கி நிற்க உதவுகிறது.

          பிராண்டிங் என்பது புதிதான வழியில் படங்கள் மூலமாகவோ,தொலைக்காட்சி மற்றும் இணையதள மூலமாகவோ மக்களின் மனதில் நம் நிறுவனத்தின் பெயரை பதிப்பதே. பிராண்ட்ங் (branding), நீங்கள் உருவாக்கும் பொருட்களை பிற நிறுவனத்திடம் வாங்கும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து உங்கள் நிறுவனத்திலிருந்து வாங்க வைக்கும். இதன் மூலம் உங்கள் லாபம் (profit) அதிகரிக்கும்.

3.வாடிக்கையாளர் உங்களை கண்டுபுடிக்க உதவுகிறது.

           உங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தனிப்பட்ட அம்சங்கள் மற்றும் உயரிய சேவைகள் இருந்தால் பிராண்ட்ங் மூலம் குறைந்த காலகட்டத்திலேயே உங்கள் தொழிலில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்க முடியும். பிராண்டிங் உங்கள் நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் புதைய செய்து, நீங்கள் சந்தையில் கொண்டு வரும் அனைத்து பொருட்களையும் உங்கள் வாடிக்கையாளர்களிடம் சேர்த்துவிடும்.

4.உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

          பணத்தை எங்கு செலவழிக்க வேண்டும் என்பது தொழிலதிபர்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் நிறுவனத்தின் பிராண்ட் விழிப்புணர்வுக்காக (Brand awareness) செலவிடபடும் பணம் நீண்ட காலத்திற்கு உங்கள் தொழிலை வளர்க்க அவசியமானது. உங்கள் நிறுவனத்தில் ஒரு முறை நல்ல பிராண்டை உருவாக்கினால், அந்த நிறுவனத்தின் அனைத்து விளைப்பொருட்களையும் குறைந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்த்துவிட முடியும்.

5.ஊழியர்கள் மேம்படுத்துகிறது.

            ஊழியர்களுக்கு நல்ல பிராண்ட் உள்ள நிறுவனத்தில் வேலை செய்வதை பெருமையாக நினைப்பார்கள். ஊழியர்களே, நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் நிறுவனத்தை பெருமிதத்தோடு மக்களிடம் பரப்புவார்கள். இதனால் மக்களுக்கும், நிறுவனத்தின் மேலும் அவர்கள் செய்யும் தொழிலின் மேலும் நம்பிக்கையை உருவாக்கும்.

சிறுதொழில்களோ அல்லது பெரிய நிறுவனமோ சிறந்த மற்றும் வெற்றியுள்ள தொழில் அமைக்க பிராண்டிங் மிகவும் அவசியமானது .

பிராண்டிங் பற்றிய கேள்விகளுக்கு, தலை சிறந்த இணையதளம் (Website development) மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமான (Digital Marketing Agency) – டூ ஆர்க் பிசுன்ஸ் சொலுஷன்ஸ் (Two Ark Business Solutions Pvt Ltd) உங்களுக்கு உதவிட தயாராக உள்ளது.

எங்களை எளிதில் அணுக மற்றும் எங்களுடன் தொடர்பில் இருக்க

          புலனம் (Whatsapp) : +91 6380994521

          கீச்சகம் (Twitter)     : https://twitter.com/twoarkbs

          முகநூல் (Facebook) : https://www.facebook.com/twoark

          லின்கிட்ன்  (LinkedIn)   https://www.linkedin.com/twoark

உங்கள் தொழிலின் முன்னேற்றத்திற்கு எங்கள் சேவையை அளிக்க தயாராக உள்ளோம்.

நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *